8 நாடுகளின் செயற்கைகோள்கள் உட்பட 30 செயற்கைகோள்களுடன் இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-43 ராக்கெட். இந்த வெற்றிக்கு பின் இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர் 'இன்று அனுப்பிய ஹைசிஸ் செயற்கைகோள் மூலமாக எடுக்கப்படும் புவியின் புகைப்படம் மிகத் தெளிவாக இருக்கும், அதன் மூலம் இந்தியாவில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பார்க்க முடியும்' என்று கூறினார்.

இஸ்ரோவின் எதிர்கால திட்டங்கள் குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டார். அதன்படி விவசாயம் மற்றும் ராணுவ துறைக்கு உதவியாக சுகன்யான் செயற்கைகோளும், அதிக எடை கொண்ட ஜி சாட் 11 செயற்கைகோளும் அடுத்து ஏவப்பட உள்ளன. இதில் ஜி சாட் 11 வரும் டிசம்பர் 5 விண்ணில் ஏவப்பட்ட உள்ளது. மேலும் அடுத்தாண்டு சந்திராயன் 2 விண்ணில் ஏவப்படும் என கூறினார்.