காவிரி நீரில் தமிழகத்தின் பங்கை குறைத்திருப்பது வருத்தமளிக்கிறது என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.
காவிரி நீர் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து நக்கீரன் இணையதளத்திடம் பேசிய அவர்,
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை பின்பற்றி 192 டிஎம்சியை வழங்கும் என்று எதிர்பார்த்தோம் 14.25 டிஎம்சியை குறைத்திருப்பது வருத்தமளிக்கிறது.
காவிரி நதி நீர் எந்த மாநிலத்திற்கும் சொந்தமில்லை என்றும் உடன் காவிரி மேலாண்மை வாரியம், பங்கீட்டுக்குழு அமைத்திட வேண்டும் எனவும் இதனை குடியரசு தலைவர் கண்காணித்திட வேண்டும்.
மேலும் காவிரியின் குறுக்கே ராசி மணல், மேகதாது அனைகள் கட்டக் கூடாது எனவும் உத்திரவிட்டுள்ளது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
மத்திய அரசு உடன் காவிரி மேலாண்மை வாரியம், பங்கீட்டுக்குழு அமைத்து முன்தேதியிட்டு தீர்ப்பை அமல்படுத்துவதோடு உடன் கருகும் பயிரை காத்திட உரிய தண்ணீரை பெற்று வழங்கிட வேண்டும். தண்ணீர் குறைவை காரணம் காட்டி மேல்முறையீடு என்ற பெயரில் தீர்ப்பை முடக்கி விடக் கூடாது.
தமிழகத்தில் அனைத்துக் கட்சி, விவசாயிகள் சங்க தலைவர்கள் கூட்டத்தை கூட்டி தீர்ப்பு குறித்து விவாதிப்பதோடு உடன் தீர்ப்பை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.