சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த விஜயை வருமானவரித்துறை அதிகாரிகள் தங்களுடைய காரில் சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்திடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
நடிகர் விஜய் தொடர்பாக செய்திகள் சர்ச்சைகள் ஆகிவரும் நிலையில், நடிகர் விஜய் சேதுபதி பற்றியும் அவர் மதம் மாறினார் என்ற தொனியில் வெளியான செய்தியை குறிப்பிட்டு "போய் வேற வேலையை பாருங்கடா" என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் கருத்து தெரிவித்துள்ளார். இதை எப்படி பார்க்கிறீர்கள்?
அவருடைய கருத்தை அவர் தெரிவித்திருக்கிறார். எங்களுக்கு கிடைத்த தகவலின்படி தமிழகத்தில் திரைப்படத்துறையினர் மூலம் கிருஸ்துவத்தை பரப்ப ஒரு முயற்சி நடைபெற்று வருகின்றது. மோசடி மதமாற்றத்தை செய்ய தமிழகத் திரை துறையினருக்கு பணம் வருகின்றது. கிருஸ்துவ கல்லூரி வைத்திருப்பவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். இதற்காக அவர் இந்து மதத்தை அவமதிக்கிறார்கள். இந்தமத முறைகளை அவமதிப்பதற்காக பல துறைகளில் இருப்பவர்கள் முயற்சி மேற்கொள்கிறார்கள். அதில் ஒரு கட்டமாகத்தான் சினிமா துறையில் இருப்பவர்கள் செய்கிறார்கள். பிகில் படத்துக்கு சிலுவை கொடுத்தது எல்லாம் இந்த நடவடிக்கையின் ஒரு கட்டமாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். விஜய் அவர்களுடைய சொந்தக்காரர்கள் பலபேர் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இவை எல்லாம் விஜய்யின் பணம் தான். அவர்களின் பினாமிகளாகத்தான் இவர்கள் இருக்கிறார்கள்.
இதற்கெல்லாம் விஜய் சேதுபதி ஏன் கருத்து தெரிவிக்கிறார்?
விஜய் சேதுபதியும் கிருஸ்துவ மதத்தை சார்ந்தவர் தானே!
விஜய் சேதுபதியின் வாக்களர் அட்டையும் நீங்கள் வைத்துள்ளீர்களா?
நாங்கள் ஏன் அவருடைய அட்டையை வைத்திருக்க வேண்டும். அவர் வேண்டுமானால் நான் கிருஸ்துவர் இல்லை என்று சொல்லட்டும். அல்லது நான் தமிழன் என்று சொல்லட்டும். விஜய் சேதுபதிக்கும் எங்களுக்கும் என்ன சண்டை இருக்கிறது.
இதுமாதிரியாக மக்கள் பக்கம் நிற்கும் நடிகர்களை தனிமைப்படுத்த மதச்சாயத்தை வேண்டும் என்றே பூசுகிறீர்களா?
விஜய் உள்ளிட்ட யார் வேண்டுமானாலும் கிருஸ்துவராக இருக்கலாம், ஆனால் அந்த மதத்தை புரோமோட் செய்ய கூடாது என்றுதான் நாங்கள் விரும்புகிறோம். இவர்களின் எண்ணம் எதுவாக இருக்கிறது என்று மக்களுக்கு நாங்கள் தெரியப்படுத்துகிறோம்.
இன்னொன்று நீங்கள் சொல்கின்ற பிரச்சனை தஞ்சாவூர் கோயிலுக்கு சீமான் எப்படி வரலாம் என்று கேட்டுள்ளீர்கள், அவர் ஏன் வரக்கூடாது?
எல்லா கோயில்களிலும் இந்து அல்லாதவர்கள் கோயில் கருவறைக்குள் செல்லக்கூடாது என்று போர்ட் வைத்திருப்பார்கள். வெளிநாட்டு பயணிகள் உள்ளிட்ட அனைவருக்கும் இது பொருந்தும். சீமான் கோயிலுக்கு வரலாம். ஆனால் செபஸ்டீன் சைமனாக அவர் இருக்கும் வரையில், அவர் கோயில் கருவறைக்கு செல்லக்கூடாது. அவர் தஞ்சை பெரிய கோயிலுக்கு யாரை அழைத்துச் செல்கிறார். முஸ்லிம் ஒருவரை அழைத்து செல்கிறார். அவர் இந்து மதத்தை பற்றியும், கோயில்களை பற்றியும், ராஜராஜ சோழனை பற்றியும் தவறாக பேசியவர். அவரை அழைத்து செல்வதை கண்டிக்கிறோம்.