கொரியா தமிழ்ச் சங்கம் சார்பில் 2019ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா அக்டோபர் 6ஆம் தேதி தென்கொரியாவில் உள்ள யுங் ஹீ பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் நக்கீரன் இணையதளத்தில் ஆதனூர் சோழன் எழுதி வெளியிட்ட ''கொரியாவின் கதை'' நூலுக்காக கொரிய தமிழ் மொழி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டு தோறும் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய தமிழ் மொழி வளர்ச்சிக்கு பாடுபட்டவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழாவை கொரியா தமிழ் சங்கம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு நடைபெறும் விழாவில் கணிணி தமிழுக்கு சிறந்த பணியாற்றிய ஆண்டோ பீட்டர் ரமேஷ் நினைவு சொற்பொழிவை நிகழ்த்த ஆளூர் ஷாநவாஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த விழாவில் எழுத்தாளர் ஆதனூர் சோழனுக்கு ''கொரியா தமிழ் மொழி விருது'' அறிவிக்கப்பட்டுள்ளது. கொரியாவின் கதையை வெளியிட்ட நக்கீரன் இணையதளத்திற்கும் புத்தகமாக வெளியிட்ட நக்கீரன் பதிப்பகத்தின் ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்களுக்கும் கொரியா தமிழ் சங்கம் தனது நன்றியை தெரிவித்துள்ளது.