Skip to main content

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!

Published on 26/12/2024 | Edited on 26/12/2024
Former Prime Minister Manmohan Singh passed away

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்க்கு  (வயது 92) திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் இன்று (26.12.2024) மாலை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறல் பிரச்சினையால் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர், ஐ.சி.யூ வார்டுக்கு மாற்றப்பட்டதாகத் தகவல் தகவல் வெளியாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து மன்மோகன் சிங் மீண்டும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அதே சமயம் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவரது மன்றைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மன்மோகன் சிங் கடந்த 1932 ஆம் ஆண்டு பஞ்சாப் மாகாணத்தில் செப்டம்பர் 26ஆம் தேதி பிறந்தார். பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆவார். இந்தியாவின் 14 ஆவது பிரதமராக கடந்த 2004 ஆம் ஆண்டு பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்து வந்தார்.

முன்னதாக, இவர் ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும், கடந்த 1991ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரையிலான முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை எதிர் கட்சி தலைவராக பதவி வகித்தார். 

சார்ந்த செய்திகள்