Published on 27/04/2021 | Edited on 27/04/2021
![dzdvzsd](http://image.nakkheeran.in/cdn/farfuture/dYZkXWpy7EPYMnCOpRH8uQgw5LjMbMXsdf1JON6W_Zs/1619507533/sites/default/files/inline-images/Ez8Sm8pVIAUPwui.jpg)
நடிகையும், அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளருமான விந்தியா, திடீர் மாரடைப்பால் மரணம் என கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் சமூகவலைதளத்தில் வலம் வந்துகொண்டிருக்கின்றன. இதைக் கவனித்த நடிகை விந்தியா, அதை தன் சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...
"உலகத்துலயே தன்னோட கண்ணீர் அஞ்சலி போஸ்டர பாத்து தானே சிரிக்குற பாக்கியம் கிடைச்சவங்கள்ல நானும் ஒருத்தி. ஸ்டாலினுக்கு வருங்கால முதல்வரேனு போஸ்டர் போட்டு அலுத்துப் போயிட்டாங்க போல. இந்தமாறி போஸ்டர் பார்த்தா ஆயுசு கூடுமாம். ஆண்டவனைத் தவிர எனக்கு என்ட் கார்டு போட எவனாலயும் முடியாது ராசா" என பதிவிட்டு தன் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.