Skip to main content

"திரும்பி வருவேன் எலெக்சனுக்கு அப்புறம்..." - கவனம் ஈர்க்கும் மாறன் ட்ரைலர்

Published on 28/02/2022 | Edited on 28/02/2022

 

maaran movie trailer out now

 

இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் 'மாறன்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க, மகேந்திரன், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட்  உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. 

 

இந்நிலையில் மாறன் படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் தனுஷ், மாளவிகா மோகனன் இருவரும் பத்திரிகையாளராக நடித்துள்ளனர். தப்பான அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் ட்ரைலர் பலரின் கவனத்தை பெற்று வருகிறது. அத்துடன் பாடம் மார்ச் 11 ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்