Published on 14/09/2018 | Edited on 14/09/2018
![jyothika](http://image.nakkheeran.in/cdn/farfuture/GJ9_xPAfIOa2Ki3ef81B4T95g2pOtoilD4F3MAdFmA4/1536947326/sites/default/files/inline-images/Jyothika-41.jpg)
பாலாவின் 'நாச்சியார்' படத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா தற்போது 'செக்கச் சிவந்த வானம்' மற்றும் ‘காற்றின் மொழி’ படங்களில் நடித்து முடித்துள்ளார். இவ்விரு படங்களும் அடுத்தடுத்து வெளியாகவுள்ள நிலையில் ஜோதிகா அடுத்ததாக ஜோக்கர், காஸ்மோரா, தீரன் அதிகாரம் ஒன்று, அருவி, என்ஜிகே ஆகிய படங்களை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். அறிமுக இயக்குனர் எஸ்.ராஜ் இயக்கும் இப்படத்தின் மற்ற விவரங்களை படக்குழுவினர் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.