Published on 30/07/2018 | Edited on 30/07/2018
![jyothika](http://image.nakkheeran.in/cdn/farfuture/es6g8ECP5lkSUia_1_0iaETDJL073Kdh-4LXmokP0Eo/1533347638/sites/default/files/inline-images/WhatsApp%20Image%202018-07-30%20at%209.58.09%20AM.jpeg)
'தும்ஹரி சூளு' ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான 'காற்றின் மொழி' படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக முடிந்துவிட்டதாக படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில் இப்படத்தை ஜோதிகாவின் பிறந்தநாளான அக்டோபர் 18ஆம் தேதி வெளியிட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் திரைப்பட வெளியீட்டு ஒழுங்குபடுத்தும் குழு அனுமதி அளித்துள்ளது. போப்டா நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன், விக்ரம் குமார், லலிதா தனஞ்ஜெயன் தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் ராதா மோகன் இயக்கியுள்ளார். இப்படத்தில் விதார்த், லட்சுமி மஞ்சு, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, குமாரவேல், மோகன் ராமன், உமா பத்மநாபன், சீமா தனேஜா, சிந்து உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.