Skip to main content

உக்ரைனுக்கு ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ நிதியுதவி

Published on 08/03/2022 | Edited on 08/03/2022

 

hollywood actor Leonardo DiCaprio donates rs 75 cores ukraine

 

ரஷ்யா, உக்ரைன் மீது ஒருவாரமாக கடும் தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது. இதில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும் உக்ரைன் மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டும், தங்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றன. இந்த சூழலில் உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்ற ரஷ்யா கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. 

 

இந்நிலையில் இந்த போரால் கடும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வரும் உக்ரைனுக்கு போரைச் சமாளிக்க லியோனார்டோ டிகாப்ரியோ  ரூ.75 கோடி(10 மில்லியன் டாலர்) நன்கொடை வழங்கியுள்ளார். ‘டைட்டானிக்’ படத்தின் மூலம்  கதாநாயகனாக அறிமுகமான டிகாப்ரியோ தனது தனித்துவமான நடிப்பின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். பல்வேறு திரைப்படங்களில் நடித்து பல விருதுகளை வென்ற இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான தி ரெவனன்ட் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்