Skip to main content

'எதற்கும் துணிந்தவன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published on 01/02/2022 | Edited on 01/02/2022

 

Etharkkum Thunindhavan movie release on march10

 

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார், சூரி, வினய் ராய், சத்யராஜ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

 

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படம் மார்ச் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்