Skip to main content

பழங்குடியின போராளியின் உண்மை கதை; பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் பா.ரஞ்சித்

Published on 25/02/2022 | Edited on 25/02/2022

 

director pa ranjith debut bollywood Birsa Munda bio film

 

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருக்கும் பா.ரஞ்சித் கடைசியாக ஆர்யா நடிப்பில் சர்பேட்டா பரம்பரை படத்தை இயக்கி இருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் நடிப்பில் நட்சத்திரம் நகர்கிறது படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் பணிகள் முடிந்து வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. 

 

இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் பா. ரஞ்சித் 19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய ஜார்கண்ட் பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் வாழ்க்கையை இந்தியில் படமாக இயக்கவுள்ளார். இது குறித்து ஏற்கனவே அறிவிப்பை வெளியிட்டிருந்த பா. ரஞ்சித் பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் நாவலின் உரிமையும் வாங்கி வைத்திருந்தார். 

 

இந்நிலையில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் வாழ்க்கை படமாக உருவாக்கவுள்ள இப்படத்தை நமா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. 'பிர்சா' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டின் இறுதியில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் மூலம் இயக்குநர் பா.ரஞ்சித் பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இதனிடையே 'அறம் படத்தை இயக்கிய கோபி நயினார் பழங்குடி மக்களுக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றை திரைக்கதையாக தான் எழுதி வைத்திருப்பதாக கூறி இருந்த நிலையில் தற்போது இப்படத்தை பா.ரஞ்சித் இயக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்