Skip to main content

'சுருளி ஸ்வாக்' -தனுஷின் தீபாவளி ட்ரீட்

Published on 09/11/2020 | Edited on 09/11/2020
jegame thanthiram

 

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் தனுஷ். 'வடசென்னை', 'அசுரன்', 'பாட்டாஸ்' ஆகிய படங்களுக்கு பிறகு ஜகமே தந்திரம் படத்தில் நடித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இப்படம் வெளியீட்டுக்கு தயாராகவுள்ளது.

 

ஜகமே தந்திரம் படத்திற்கு, சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே தனுஷ் பிறந்தநாளன்று, இப்படத்திலிருந்து 'ரகிட..ரகிட..ரகிட' பாடல் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

 

இந்த நிலையில் ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்டாக, ஜகமே தந்திரம் படத்திலிருந்து,  வீடியோ சாங்  ஒன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 'புஜ்ஜி' என்ற பாடலின் வீடியோ சாங், நவம்பர் 13 ஆம் தேதி வெளியாகும் என தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள போஸ்டரில் 'விட்னஸ் தி சுருளி ஸ்வாக் திஸ் தீபாவளி" என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்