Skip to main content

"இந்தப் படம் பலரது பள்ளிப் பருவத்தை ஞாபகப்படுத்தப் போகிறது" - பாக்யராஜ்

Published on 21/08/2023 | Edited on 21/08/2023

 

bhagyaraj speech at rangoli movie press meet

 

ஜி. சதீஷ்குமார் தயாரிப்பில் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் புதுமுகங்கள் ஹமரேஷ் பிரார்த்தனா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ரங்கோலி'. மாநகரம், தெய்வத் திருமகள் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹமரேஷ், இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார். பிரார்த்தனா சந்தீப், சாய் ஶ்ரீ, அக்‌ஷயா ஆகியோர் இப்படத்தில் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆடுகளம் முருகதாஸ் முக்கிய பாத்திரமொன்றில் நடித்துள்ளனர். செப்டம்பர் 1 அன்று திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. 

 

இயக்குநர் பொன்ராம் பேசியதாவது, "இந்தப் படம் பார்த்துவிட்டேன், மிக அற்புதமாக இருக்கிறது. இயக்குநர் முதல் டீம் மொத்தமும் அட்டகாசமாக உழைத்துள்ளனர். ஹமரேஷ் அட்டகாசமாக நடித்துள்ளார். புதுமுகம் மாதிரி தெரியவில்லை. ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் இருவரும் படத்தைத் தாங்கியுள்ளனர். ஹமரேஷ் மிகப்பெரிய இடத்திற்கு வருவார். ஸ்கூல் பசங்களா நடித்தவர்களும் நன்றாக நடித்துள்ளனர். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்" என்றார். 

 

இயக்குநர் விஜய் பேசியதாவது, "என் மருமகன் முழுக்க தமிழ் பேசியது அழகாக இருந்தது. 2005 மார்ச் மாசம் ஹமரேஷ் பிறந்தது எனக்கு ஞாபகம் இருக்கிறது. உண்மையான உழைப்பாளி, சினிமாவில் ஜெயிக்க எல்லா திறமையும் அவரிடம் இருக்கிறது. வாலி மோகன் தாஸ் நன்றாக இயக்கியுள்ளார்" என்றார். 

 

இயக்குநர் பாக்யராஜ் பேசியதாவது, "இந்த படத்தைப் பலரும் பார்த்து விட்டனர் என்று கேட்டதும் என்னை ஏன் கூப்பிடவில்லை என்று ஆச்சரியமாக இருந்தது. இந்தப் படம் பலரது பள்ளிப் பருவத்தை ஞாபகப்படுத்த போகிறது. படத்தில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்து, அந்த கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளனர். எனக்கும் என் பள்ளிப் பருவம் ஞாபகம் வந்தது. கதாநாயகன் ஹமரேஷ் தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். வளர்ந்து வரும் நடிகர்களுக்கு அதுவே முக்கியம். இயக்குநர் வாலி மோகன் தாஸுக்கு என் வாழ்த்துக்கள். ஒரு நல்ல படத்தை அழகாக உருவாக்கியுள்ளீர்கள். ஏ.எல். அழகப்பன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்