![anjali web series Fall released date announced](http://image.nakkheeran.in/cdn/farfuture/ebWrQyGqgnR_J-loMWAFk-eVAnQS8j0YiEdoy5fsUIw/1669448103/sites/default/files/inline-images/48_34.jpg)
தமிழ்த் திரையுலகில் படங்களைத் தாண்டி தற்போது வெப் சீரிஸ்களுக்கான வரவேற்பும் அதிகரித்து வருகிறது. இதனால் பல முன்னணி பிரபலங்கள் இணையத் தொடர்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் அஞ்சலி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள வெப் சீரிஸ் 'ஃபால்'.
இத்தொடரில் எஸ்பிபி சரண், சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்தொடரை இயக்குநர் சித்தார்த் ராமசாமி இயக்கியது மட்டுமல்லாமல் ஒளிப்பதிவும் செய்துள்ளார். இந்த தொடர் 'வெர்டிஜ்' எனும் கனடிய வெப் தொடரின் அதிகாரப்பூர்வ தழுவலாகும்.
இந்நிலையில் இந்த தொடரின் ட்ரைலர் தற்போது வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழில் உருவாக்கப்பட்ட இந்த தொடர் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் மராத்தி மொழிகளில் டப்பிங் செய்து டிசம்பர் 9-ல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.