Skip to main content

தோனியைக் கையெடுத்து கும்பிட்ட எதிரணி வீரர்!

Published on 23/09/2020 | Edited on 23/09/2020

 

Yashasvi Jaiswal

 

 

சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது, தோனியைப் பார்த்த பரவசத்தில் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் ஒருவர் கையெடுத்துக் கும்பிட்ட ருசிகர சம்பவம் நடந்துள்ளது.

 

13-வது ஐபிஎல் தொடரின் நான்காவது நாளான நேற்று, சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் ராஜஸ்தான் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் போட்டுவிட்டு, களத்திற்குள் இறங்க தயாராக இருந்த நேரத்தில் ராஜஸ்தான் அணியைச் சேர்ந்த இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், தோனியை அருகில் பார்த்த மகிழ்ச்சியில் அவரைக் கையெடுத்து கும்பிட்டார். அந்த காட்சி அங்கிருந்த ஒரு கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த காணொளியை ரசிகர்கள் தற்போது அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

 

 

 

Next Story

RR vs RCB : ராஜஸ்தான் அணி அசத்தல் வெற்றி!

Published on 23/05/2024 | Edited on 23/05/2024
RRvsRCB: Amazing win for Rajasthan

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் போட்டியின் எலிமினேட்டர் சுற்று நேற்று (22.05.2024) நடைபெற்றது. புள்ளிப்பட்டியலில் 3 வது மற்றும் 4 வது இடத்தில் இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணியின் கேப்டன் டுபிளசி 17 ரன்களும், விராட் கோலி 33 ரன்களும், கிரீன் 27 ரன்களும், தினேஷ் கார்த்திக் 11 ரன்களும், ரஜத் படிதர் 34 ரன்களும், லாம்ரர் 32 ரன்களும் எடுத்தனர். மேக்ஸ்வெல் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது.

அதனைத்தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் சார்பில் காட்மோர் 20 ரன்களும், ஜெய்ஸ்வால் 45 ரன்களும், சஞ்சு சாம்சன் 17 ரன்களும், துருவ் ஜுரெல் 8 ரன்களும், ரியான் பராக் 36 ரன்களும், ஷிம்ரன் ஹெட்மயர் 26 ரன்களும் எடுத்தனர். பாவெல் 16 ரன்கள எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக ராஜஸ்தான் அணி 19 ஓவரில் 6 விக்கெட்டு இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மேலும் ராஜஸ்தான் அணியின் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

இதன் மூலம் ராஜஸ்தான் அணி நாளை (24.05.2024) சென்னையில் நடக்கும் இரண்டாவது தகுதிச் சுற்று போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி சென்னையில் நடைபெறும் இறுதிப் போட்டியில் (26.05.2024)) கொல்கத்தா அணியை எதிர்கொள்ள உள்ளது. 

Next Story

தோனி, கோலியைப் போல் இறுதிவரை நம்பிக்கையுடன் போராட வேண்டும் - ராஜஸ்தான் வீரர் புகழாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Dhoni, like Kohli, has to fight till the end with confidence - praises the Rajasthan player

தோனி, கோலியைப் போல் இறுதிவரை நின்று  நம்பிக்கையுடன் போராட வேண்டும் என்று ராஜஸ்தான் வீரர் பட்லர் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஐபிஎல் 2024இன் 31ஆவது லீக் ஆட்டம் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சாம்சன் முதலில் பந்து வீச தீர்மானித்தார்.

முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான சால்ட் 10 ரன்களில் வெளியேறினார். பின்னர் நரைன், ரகுவன்ஷி இணை கொல்கத்தா ரசிகர்களை குதூகலிக்க வைத்தது. கடந்த சில ஆட்டங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நரைன் இந்த ஆட்டத்தில் அதிரடியின் உச்சம் தொட்டார்.

ராஜஸ்தான் பந்து வீச்சாளர்களை தனது நேர்த்தியான பேட்டிங்கின் மூலம் நிமிர விடாமல் செய்தார். 56 பந்துகளில் 6 சிக்சர்கள் 13 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் குவித்தார். ஐபிஎல்-இல் இது அவருடைய முதலாவது சதமாகும். ரகுவன்ஷி 30, ஷ்ரேயாஸ் 11, ரசல் 13, ரிங்கு 20 ரன்கள் உதவியுடன் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் குவித்தது.

224 ரன்கள் என்பது இமாலய இலக்காக இருந்தாலும், பலமான பேட்டிங் உள்ளதால் கொல்கத்தாவில் இதை சேஸ் செய்யலாம் என்ற நம்பிக்கையுடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. ஆனால் அந்த நம்பிக்கையை தகர்க்கும் விதமாக ஜெய்ஸ்வால் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் சாம்சனும் 12 ரன்களில் வெளியேற ராஜஸ்தான் அணி தாடுமாறியது. இருப்பினும் பட்லருடன் இணைந்த பராக் ஓரளவு அதிரடி காட்டி 14 பந்துகளில் 34 ரன்கள் அடித்து வெளியேறினார்.

அடுத்து வந்த ஜுரேல் 2, அஸ்வின் 8 என சீக்கிரமே நடையைக் கட்டினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹெட்மையரும் டக் அவுட் ஆக ராஜஸ்தான் திணறியது. ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபக்கம் அரைசதம் கடந்து நங்கூரம் போட்டு நின்றார் பட்லர். ரோமன் பவலின் அதிரடியான 26 ரன்கள் உதவியுடன் 19 ஓவர்களில் 215 ரன்கள் எடுத்தது.

கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து தனது சதத்தையும் கடந்தார் பட்லர். 5 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட, அடுத்த 3 பந்துகள் டாட் பாலானது. 2 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட 5ஆவது பந்தில் 2 ரன்கள் எடுக்க, கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்டது. ஐபிஎல் 2024இன் முதல் சூப்பர் ஓவர் ஆகுமோ என்று ரசிகர்கள் எதிர்பார்த்த வேளையில், கடைசி பந்தில் படலர் சிங்கிள் எடுக்க ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி 6 வெற்றிகள் மற்றும் 1 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.

சிறப்பாக ஆடிய பட்லருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அப்போது அவர் பேசியதாவது “ நீங்கள் நம்பிக்கொண்டேயிருக்க வேண்டும். அதுதான் வெற்றியின் திறவுகோல். நான் எனது பேட்டிங்கில் தடுமாறும்போது எனக்கு எதிர்மறையான எண்ணங்கள் தோன்றும். ஆனால் அதை எதிர்த்து என் எண்ணங்களை மாற்ற முயற்சிப்பேன். பொறுமையுடன் தொடர்ந்து முயற்சி செய்யும் போது சரியாக நடக்கும். இது மாதிரி ஐபிஎல்லில் எனக்கு நிறைய முறை நடந்துள்ளது. தோனி மற்றும் கோலி, இது போல் பல முறை ஆடியதைப் பார்த்திருப்பீர்கள். அவர்களைப் போல் இறுதி வரை நம்பிக்கையுடன் தொடர்ந்து போராட வேண்டும் என்று முடிவு எடுத்தேன். சங்கக்கராவும் அதைத்தான் சொல்வார். பேட்டிங் செய்ய தடுமாறும்போது நாம் அழுத்தத்திற்கு உள்ளாகி தவறான ஷாட் மூலம் விக்கெட்டை பறிகொடுப்போம். கொஞ்சம் நிதானமாக் யோசித்து பொறுமையாக ஆடினால் நமக்கான ஒரு ஷாட் கிடைக்கும். அது நம்பிக்கையைக் கொடுக்கும் என்று. ஒரு பெரிய சேசிங்கில் கடைசி பந்தில் ரன் எடுத்து வெற்றி பெறுவது மனதுக்கு நிறைவானது” என்றார்.