Skip to main content

சிறுநீரகக் கல்லை எளிதில் நீக்க தீர்வு இதோ ...

Published on 06/02/2019 | Edited on 06/02/2019

இன்றையக் காலக் கட்டத்தில் வயது வித்தியாசம் இல்லாமல் ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவருக்கும்  வரக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று சிறுநீரகக் கல் பிரச்னை.அதற்கு நம் அன்றாட வாழ்வின் உணவு முறையும் பயன் படுத்துகிற தண்ணீரும் ஒரு மூல காரணியாக இருக்கிறது .இந்த சிறுநீரகக்  கல் ஏற்படுத்திக்கிற வலியை அந்த நோய் வந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் அப்படி சொல்ல முடியாத அளவுக்கு வலியை ஏற்படுத்தும் .சீறுநீரகக் கல்லை கட்டுப்படுத்த சில வழிமுறைகள் இருக்கின்றன எப்படி என்று பார்க்கலாம் நெய், வெண்ணை, தக்காளி, முள்ளங்கி, பசலைகீரை, பட்டாணி, முந்திரி போன்றவற்றை அதிகம் உட்கொண்டால் சிறுநீரக கற்கள் தோன்றும். ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். கோடை காலத்தில் இளநீர், மோர், அதிகமாக குடிக்கவும். தினமும் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்யுங்கள். அதன் மூலம் ரத்தத்தில் உள்ள கால்சியம் சத்து எலும்புகளுக்கு சென்றடையும். பால், வெண்ணை பூண்டு கருணைகிழங்கு, பசலைகீரை, முள்ளங்கி போன்றவற்றை சாப்பிடக்கூடாது. உப்பை குறைத்தால் சிறுநீரகத்தில் கால்சியத்தின் கடுமை குறையும். ஒரு நாளைக்கு 2 முதல் 3 கிராமிற்கு மேல் உப்பு சேர்க்கக் கூடாது. பதப்படுத்த உணவு மற்றும் சிப்ஸ் வகைகளை தவிர்க்கவும். மக்னீசிய சத்துள்ள உணவு சாப்பிடுவது நல்லது. வைட்டமின் பி6 சிறுநீரில் உள்ள கற்களை குறைக்க உதவும்.
 

kidney pain

நார்சத்து மிகுந்த உணவை அதிகம் சாப்பிட வேண்டும். காபி, டீ, ஐஸ்கிரீம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லதுஎல்லா வகையான மதுபானங்களையும் அருந்துவதாலும், இறைச்சி மற்றும் முட்டைகோஸ், தக்காளி, காலிஃபிளவர், வெள்ளரி, சப்போட்டா போன்ற காய்கறி பழங்களை அதிகளவு உண்பதாலும், தாகத்தின் போதும் கடுமையான உடற்பயிற்சிக்கு பின்பும் நீர் அருந்தாமையாலும், சிறுநீரக பையில் அடிக்கடி தொற்று ஏற்படுவதாலும், சிறுநீரிலும், இரத்தத்திலும், சுண்ணாம்புசத்து அதிகமிருக்க கூடிய நிலையிலும், சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற உணர்வு ஏற்பட்டவுடன் சிறுநீரை அடக்கி வைப்பதாலும் கற்கள் தோன்றுகின்றன.திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, ராச்ப்பெர்ரி போன்ற பழவகைகளையும், பூசணிக்காய், வாழைத்தண்டு போன்ற நீர்ச்சத்து மிகுந்த காய்களையும், தர்பூசனி , ஆப்பிள், எலுமிச்சை பழசாறுகள் சிறுநீரக கற்களை கரைக்கும் தன்மை கொண்டது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வரவும்.புரோட்டீன் அதிகமுள்ள இறைச்சி போன்ற பொருட்களை தவிர்ப்பது நல்லது.
3 நாட்கள் இடைவெளியில், 2 முறை அதாவது செவ்வாய், வெள்ளி, இந்த கிழமைகளில் நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், சிறிது கடுகுஎண்ணெய் கலந்து லேசாக (வெதுவெதுப்பாக) சூடாக்கி அதனை வயிறு, முதுகு, தலை ஆகிய பகுதிகளில் தேய்த்து ஊறவிட்டு பிறகு வெதுவெதுப்பான நீரில் தலைக்கு குளிக்க வேண்டும். அன்றைய தினம் சாப்பிடும் உணவில், சூடான மிளகு ரசம், கருவேப்பிலை துவையல், தேங்காய் சீரகம் சேர்த்து அரைத்த பூசணிக்காய் கூட்டு, மோர், கேரட் போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். எப்பொழுதும் வெதுவெதுப்பான நீரை பருகுதல் நல்லது.வாழை தண்டு சாறு தினமும் காலையில் குடித்து வரலாம். பார்லியை நன்கு வேக வைத்து நிறைய தண்ணீரோடு குடித்து வந்தால், அதிக சிறுநீர் வெளியேறி சிறுநீரகத்தில் உப்பு சேர்வது தடுக்கப்படும். வாரத்தில் ஒருமுறை இதை செய்யலாம். வெயில் காலத்தில் தினமும் ஒரு இளநீரும் மற்ற காலங்களில் வாரத்திற்கு 2 முறை. அகத்தி கீரையுடன், உப்பு, சீரகம் சமைத்து சாப்பிடவும்.

முள்ளங்கி சாறு 30 மில்லி அளவு குடித்து வந்தால் சிறுநீரக கோளாறு நீங்கும். புதினா கீரையை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்கள் பலப்படும். துளசி இலையின் சாறு எடுத்து, அதனுடன் தேன் கலந்து ஆறு நாட்கள் உட்கொண்டால்  சிறுநீரகக்கல்  கரையும். அத்திபழம் - இதை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வரலாம்.மாதுளை - இந்த பழத்தின் விதையை பிழிந்து 2 ஸ்பூன் கொள்ளு (காணம்) சாறுடன் (ஒன்றுக்கு இரண்டு என்ற விதத்தில் சேர்த்து சாப்பிட்டால் கல் கலையும்.வெள்ளரி - விதையை பால் சேர்த்து மையா அரைக்கணும். அதுல ஒரு கோலிகுண்டு அளவு எடுத்து தினமும் சாப்பிட்டு வரவும்.எலுமிச்சை தினசரி 4 தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை இரண்டு லிட்டர் தண்ணீருடன் கலந்து சிறிது சிறிதாக குடித்து வர வேண்டும்.பிரன்ச் பீன்ஸ் : 10 கிராம் வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2 மணி நேரம்) மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்துவிட்டு 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் தண்ணீரை (ஒரே முறையில் குடிக்க முடியவில்லை என்றால் சிறிது நேரம் விட்டு விட்டு குடிக்க வேண்டும்.வெறும் வயிற்றிலே அத்திப் பழங்களை நிரம்ப உண்டு வந்தால், மூத்திரப்பையிலுள்ள கற்கள் அகலும்.அன்னாசிப் பழத்தை வெறும் வயிற்றிலே அடிக்கடி சாப்பிட்டு வந்தால், கற்கள் கரைந்துவிடும்.