Published on 22/10/2021 | Edited on 22/10/2021

ரஷ்யா மற்றும் சீனாவுக்குப் போட்டியாக அமெரிக்கா மேற்கொண்ட ஹைபர் சோனிக் ஏவுகணை சோதனை தோல்வியில் முடிவடைந்தது.
அதிகளவில் வெடிபொருட்களை சுமந்து, ஒலியை விட ஐந்து மடங்கு வேகமாகச் சென்று தாக்கும் திறன் கொண்டவை ஹைபர் சோனிக் ஏவுகணைகள். ஏற்கனவே, ரஷ்யா மற்றும் சீனா இவ்வகை ஏவுகணைகளை வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளனர். இந்த நிலையில், அமெரிக்காவும் ஹைபர் சோனிக் ஏவுகணைகளைப் பரிசோதனை செய்தது. அலாஸ்காவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்பட்ட ஏவுகணை எதிர்பார்த்தபடி செயல்படவில்லை என்றும், ஏவுகணைக்கான பூஸ்டர்கள் இயங்கவில்லை என்றும் அமெரிக்கா ராணுவம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து இதை மேம்படுத்துவதற்கான பணிகளை முன்னெடுத்திருப்பதாகவும் கூறியுள்ளது.