
தேனி மாவட்டம் குன்னூரில் ஆண், பெண் என இருவர் ரயில்வே தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(27). திருமணமான மணிகண்டன் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் முறையற்ற தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த முறையற்ற தொடர்பினால் வீட்டில் எதிர்ப்புகள் கிளம்பியது. எனவே இருவரும் வீட்டை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இருவரும் பைக் மூலம் தேனிக்கு வந்திருந்த நிலையில் நேற்று இரவு சுமார் எட்டு மணியளவில் குன்னூர் பகுதியில் பைக்கை நிறுத்திவிட்டு தண்டவாளத்தில் விழுந்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அப்போது போடிநாயக்கனூரில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற ரயில் மோதி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இன்று காலை உடல்களை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
முறையற்ற தொடர்பினால் இருவர் வீட்டை விட்டு வெளியேறி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.