Published on 15/02/2020 | Edited on 15/02/2020
இலங்கை ராணுவத் தளபதி அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் போம்பியோ தெரிவித்துள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி கட்ட போரில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக தற்போதைய இலங்கை ராணுவத் தளபதியான ஷாவேந்திர சில்வா மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது. போர் நடந்த காலத்தில் இலங்கை ராணுவத்தின் 58-வது பிரிவுக்கு தலைமை வகித்த அவர் தமிழர்களுக்கான அடிப்படை வசதிகளை தடுத்து நிறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கை உள்நாட்டு போரின் போது, செய்த குற்றங்களுக்காக சில்வாவுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் போம்பியோ தெரிவித்துள்ளார்.