Skip to main content

கரோனா வைரஸின் ஆறு புதிய அறிகுறிகள்... ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு...

Published on 29/04/2020 | Edited on 29/04/2020

 

six new symptoms of corona virus

 

கரோனா வைரஸுக்கான ஆறு புதிய அறிகுறிகளை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

சீனாவின் வுஹான் நகரில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் இன்று உலகமும் முழுவதையும் புரட்டி போட்டுள்ளது. நுரையீரலைத் தாக்கி சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் இந்த வைரஸை கட்டுப்படுத்த இதுவரை எந்தத் தடுப்பு மருந்துகளும் கண்டறியப்படவில்லை. அதேபோல இதனால் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்தவும், வேறு சில நோய்களுக்கு வழங்கப்படும் மருந்துகளே நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கரோனா வைரஸுக்கான ஆறு புதிய அறிகுறிகளை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.


இதுவரை காய்ச்சல், இருமல், மூச்சுவிடுவதில் சிரமம் ஆகியவையே கரோனாவின் அறிகுறிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழலில், புதிய ஆராய்ச்சி முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், கரோனாவிற்கான ஆறு புதிய அறிகுறிகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, குளிர்காய்ச்சல், நடுக்கத்துடன் கூடிய குளிர்காய்ச்சல், தசைவலி, தலைவலி, தொண்டை கரகரப்பு மற்றும் நுகரும் தன்மை அல்லது சுவை உணர்வு திடீரென குறைந்து போதல் ஆகியவை கரோனா அறிகுறிகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுமட்டுல்லாமல் சிலருக்குக் கண்கள் சிவந்துபோதல் அல்லது தோல்களில் தடிப்பு ஏற்படுதல் ஆகியவையும் அறிகுறிகளாகத் தென்படுவதாக ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 

 

 


 

சார்ந்த செய்திகள்