
சிதம்பரம் ரயில் நிலைய நுழைவு வாயிலை மது பிரியர்கள் ஆக்கிரமித்துள்ளதால் அவ்வழியாக வரும் ரயில் பயணிகளுக்கு முகசுலிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் சுற்றுலா நகரமாகும். இங்கு நடராஜர் கோயில், அண்ணாமலைப்பல்கலைக்கழகம், பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளன. சிதம்பரம் பகுதிக்கு ரயில்கள் மூலம் தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கிறார்கள். சிதம்பரம் ரயில் நிலையம் வழியாக ஒரு நாளைக்கு 20-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகிறது.
ரயில் நிலையத்திற்கு உள்ளே செல்லும் நுழைவாயிலில், தமிழக அரசின் டாஸ்மாக் கடை உள்ளதால் மது பிரியர்கள், ரயில் நிலையத்திற்கு உள்ளே செல்லும் நுழைவு பகுதியை ஆக்கிரமித்து அவர்களது இருசக்கர வாகனங்களை நிறுத்தி அங்கேயே அமர்ந்து மதுபானங்களை அருந்துகிறார்கள். இது அவ்வழியாக செல்லும் பயணிகளுக்கு இது முகசுலிப்பை ஏற்படுத்துகிறது. ரயில் பயணிகள், பொதுமக்கள் ரயில் நிலைய நுழைவு வாயில் வழியாக வரும்போது குடிபிரியர்கள் நுழைவாயிலின் ஓரத்தில் உள்ள கட்டையில் அமர்ந்து மது அருந்திகொண்டு கீழ்தரமான தகாத வார்த்தையில் பேசி பயணிகளை கிண்டல் கேலி செய்கிறார்கள். இது அனைவருக்கும் வேதனையை ஏற்படுத்துகிறது.
இது குறித்து கடலூர் மாவட்ட டாஸ்மாக் மண்டல மேலாளர் உள்ளிட்ட காவல்துறையினருக்கு பயணிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. உடனடியாக ரயில் நிலைய நுழைவு வாயில் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இரவு நேரத்திலும் இங்கு மது விற்பனை செய்யப்படுகிறது. மதுவை வாங்கி கொண்டு ரயில் நிலைய நுழைவு வாயில் கட்டையில் இரவில் அமர்ந்து மதுபானம் அருந்துகிறார்கள். இதனால், ரயிலில் இருந்து இறங்கி அண்ணாமலைப் பல்கலைக்கழகம் செல்லும், மாணவிகள் உள்ளிட்ட பெண் பயணிகளுக்கு பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. தற்போது சிறு, சிறு பிரச்சனைகள் மது பிரியர்களால் ரயில் பயணிகள், பொதுமக்களுக்கு ஏற்பட்டு வருகிறது. இது பெரிதாக மாறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.