
ஹிட் திரைப்படங்கள் இதுவரை இரண்டு பாகங்கள் வெளியாகி தெலுங்கு திரை உலகில் பெரிய வெற்றி படங்களாக மாறியிருக்கிறது. இதனால் அதன் தொடர்ச்சியாக மூன்றாவது பாகத்தில் நாணி கதாநாயகனாக நடித்து வெளியாகி இருக்கும் இந்த ஹிட் - தி தேர்ட் கேஸ் திரைப்படம் முந்தைய பாகங்களை காட்டிலும் பெரும் வெற்றி பெற்றதா, இல்லையா? என்பதை பார்ப்போம்....
ஜம்மு காஷ்மீரில் புலனாய்வு போலீஸ் எஸ் பி ஆக இருக்கும் நானி அங்கு நடக்கும் மர்மமான கொலைகளை கண்டுபிடிக்கும் கேசை கையில் எடுக்கிறார். காஷ்மீரில் அடுத்தடுத்து யாரோ ஒருவர் தலைகீழாக தொங்கப்பட்டு அவரது கழுத்து தலை என சில பாகங்கள் அறுக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடக்கின்றனர். பின்பு இதே போல் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் இதே போன்ற கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது. இந்த கொலைகளை செய்யும் சைக்கோ கொலைகாரர்கள் ஏன் இப்படிப்பட்ட கொலைகளை தொடர்ந்து ஒரே டெம்ப்ளேட்டில் செய்கின்றனர் என்ற கேள்விக்கு விடை தெரியாமல் குழம்பி போகும் போலீஸ் அதிகாரி நானி அதனை கண்டுபிடிப்பதற்காக பல்வேறு வன்முறைகளில் ஈடுபடுகிறார். இதனால் அவர் விசாகப்பட்டினத்திற்கு டிரான்ஸ்பர் செய்யப்படுகிறார். வந்த இடத்தில் அவரும் இரண்டு நபர்களை தலைகீழாக தொங்கவிட்டு அதேபோன்ற ஒரு கொலையை செய்து அதை தன் கேமராவில் படம் பிடித்து வைத்துக் கொள்கிறார். இவர் ஏன் இப்படி செய்ய வேண்டும்? இதன் பின்னணியில் இருக்கும் காரணம் என்ன? இப்படி ஒரே பேட்டர்னில் தொடர் கொலைகள் நடப்பதற்கு யார் காரணம்? அவர்களை போலீஸ் பிடித்ததா, இல்லையா? என்பதே இந்த ஹிட் - தி தேர்டு கேஸ் படத்தின் மீதி கதை.
ஒரு மர்டர் மிஸ்டரி கதையை எடுத்துக் கொண்டு அதை இந்தியா முழுவதும் பயணிக்க செய்து ஆங்காங்கே ஒரே பேர்ட்டனில் நடக்கும் கொலைகளை வைத்துக்கொண்டு ஒரு போலீஸ் அதிகாரி எப்படி தன் வன்முறை பாணியில் அந்த கொலைகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் என்பதை ரத்தக் கலரியாக படம் முழுவதும் வன்முறை கலந்த மர்டர் மிஸ்டரி இன்வெஸ்டிகேடிவ் திரில்லர் படமாக இந்த ஹிட் 3 படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் சைலேஷ் கோலானு. இந்த கால ட்ரெண்டுக்கு ஏற்ப வன்முறை நிறைந்த ஒரு இன்வெஸ்டிகேட்டு திரில்லர் படமாக கொடுத்து இயக்குனர் ஒவ்வொரு காட்சியும் சுவாரசியமாக அமைத்து அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை யூகிக்க முடியாத படி ஒரு மர்டர் மிஸ்டரி படத்திற்கு என்ன விதமான காட்சி அமைப்புகள் தேவையோ அதை சிறப்பான முறையில் கொடுத்து ஒரு நல்ல இன்வெஸ்டிகேட்டிவ் திரில்லர் படம் பார்த்த உணர்வை கொடுத்து படத்தையும் கரை சேர்த்திருக்கிறார். தமிழ் தெலுங்கு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதற்கு நல்ல வாய்ப்பாக சிறப்பான முறையில் திரைக்கதை அமைத்து அதை ரசிக்கும் படியும் கொடுத்திருக்கிறார். படத்தில் வன்முறை நிறைந்த காட்சிகள் அதிகமாக இருப்பதால் அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்க முடியுமா என்ற கேள்வி மட்டும் ஒரு பக்கம் எழுகிறது. அது சற்றே படத்திற்கு மைனஸ் ஆக அமைந்தாலும் படம் எந்த ஒரு இடத்திலும் தொய்வில்லாமல் சரியான பாதையில் பயணித்து போக போக வேகம் எடுத்து விறுவிறுப்பாக நகர்ந்து நல்ல திரில்லர் படம் பார்த்த உணர்வை இந்த ஹிட் - தி தேர்ட் கேஸ் திரைப்படம் கொடுத்து இந்த ஹிட் மூன்று பாகம் வரிசையில் இந்த மூன்றாவது பாகம் வெற்றி படமாகவும் அமைந்து நான்காவது பாகத்திற்கு லீடம் கொடுத்து முடித்திருக்கிறது.
அதிரடி வன்முறை நிறைந்த போலீஸ் அதிகாரியாக வரும் நான் எந்த ஒரு இடத்திலும் சிரிக்காமல் தான் எடுத்த முயற்சியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கும் போலீஸ் அதிகாரியாக சிறப்பாக நடித்திருக்கிறார். போதும் இடமெல்லாம் வன்முறை நிறைந்த அடிதடி வெட்டு குத்து என பார்ப்பவர்களை கண்டமேனிக்கு போட்டு தள்ளும் போலீஸ் அதிகாரியாக வரும் அவர் காட்சிக்கு காட்சி மூளைக்கும் வேலை கொடுத்து அதே சமயம் ஆக்சன் காட்சிகளும் ரத்தம் சொட்ட சொட்ட கொடுத்து பார்ப்பவர்களுக்கு சிலிர்ப்பை கொடுத்து இருக்கிறார். இதற்கிடையே வரும் காதல் காட்சிகளிலும் சிறப்பான முறையில் பங்களிப்பு கொடுத்து படத்தையும் தாங்கி பிடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக வரும் ஸ்ரீநிதி செட்டி ஆரம்பத்தில் வழக்கமான நாயகிகள் செய்யும் விஷயத்தை மட்டுமே செய்துவிட்டு சென்றுவிடாமல் இரண்டாம் பாதிக்கு மேல் போலீஸ் அதிகாரியாக உருவெடுத்து ஞானி உடன் பயணிக்கும்படியான ஒரு கதாபாத்திரத்துடன் கதைக்குள் தனது பங்களிப்பும் கொடுத்து கவனம் பெற்று இருக்கிறார். இவருக்கும் நானேக்குமானு கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது. தந்தையாக வரும் சமுத்திரகனி வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி மனதில் பதிக்கிறார். ஒரு மிகப்பெரும் சைக்கோபாத் கொலைகாரர்கள் கூட்டத்திற்கு தலைவனாக வரும் வில்லன் பிரதீப் பப்பர் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். இப்படி எல்லாம் கொலைகாரர்கள் இருப்பார்களா என்ற உணர்வை இந்த கதாபாத்திரங்கள் மூலம் கொடுக்க முயற்சி செய்த இயக்குனர் அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார். மற்றபடி உடனடித்த அனைத்து நடிகர்களுமே அவர் அவர் வேலையை சிறப்பாக செய்து இந்த படத்தை வெற்றி படமாக மாற்ற எடுத்த முயற்சியில் வெற்றி பெற்றிருக்கின்றனர். இவர்களது பங்களிப்பு படத்திற்கு பக்கபலமாக அமைந்து இந்த படத்தையும் கரை சேர்க்க உதவி இருக்கிறது.
சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவில் படம் உலகத்தரம். குறிப்பாக ஆக்சன் காட்சிகளை சிறப்பான முறையில் காட்சிப்படுத்தி ஒரு திரில்லர் படத்திற்கு எந்த மாதிரியான ஒளி அமைப்புகள் தேவையோ அதை சிறப்பான முறையில் கொடுத்து படத்தை வேறு ஒரு தளத்திற்கு இவரது ஒளிப்பதிவின் மூலம் எடுத்துச் சென்று இருக்கிறார். மிக்கி ஜே மேயர் இன் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை மிக மிக சிறப்பாக அமைக்கப்பட்டு படத்தையும் தூக்கி நிறுத்தி இருக்கிறது. ஒரு மர்டர் மிஸ்டரி இன்வெஸ்டிகேடிவ் திரில்லர் படத்திற்கு எந்த மாதிரியான இசை தேவையோ அதை சிறப்பான முறையில் கொடுத்து படத்திற்கும் நல்ல பங்களிப்பு கொடுத்திருக்கிறார்.
ஹிட் முதல் இரண்டு பாகங்களில் நடித்த இரண்டு ஹீரோக்களும் கிளைமாக்ஸ் காட்சிகளில் படத்தில் தோன்றி தியேட்டர்களை அதகலப்படுத்துகின்றனர். அதேபோல் நானி ஒரு கேசை கையில் எடுத்துக்கொண்டு அதை சிறப்பான முறையில் இன்வெஸ்டிகேடிவ் செய்யும் காட்சிகள் மிகவும் விறுவிறுப்பான காட்சி அமைப்புகளால் ரசிக்கும்படி அமைந்திருக்கிறது. அதே போல் இறுதி கட்ட கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு மிகப்பெரிய நடிகர் கௌரவத் தோற்றத்தில் தோன்றி இருப்பதும் படத்திற்கு பெரிய பிளஸ் ஆக மாறி தியேட்டர்களில் விசில் மட்டும் கைதட்டல்கள் சத்தங்களால் அதிர்கிறது. இப்படியான பல்வேறு கூஸ்பம் ஆக்சன் மொமண்ட்டுகள் படம் முழுவதும் இருப்பதும் அதே சமயம் கதை மற்றும் திரைக்கதைக்கு முக்கியத்துவம் அளித்து விறுவிறுப்பாக கொடுத்து இருப்பதும் இந்த ஹிட் - தி தேர்டு கேஸ் திரைப்படம் முந்தைய பாகங்கள் கொடுத்த வெற்றி வரிசையில் ஸ்மூத்தாக இணைந்திருக்கிறது.
ஹிட் - தி தேர்டு கேஸ் - ஹிட்!