
சென்னை அமைந்தகரை பகுதியில் சாலையில் திறந்து கிடந்த பாதாளச் சாக்கடையில் சிறுவன் ஒருவன் தவறி விழுந்த பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை அமைந்தகரை வெள்ளாளர் தெருவில் நச்சு வாயுக்கள் வெளியேறுவதற்காக பாதாளச் சாக்கடையானது திறந்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த ராஜன் என்ற சாலையில் சிறுவன் நடந்து சென்ற பொழுது பாதாள சாக்கடையில் உள்ளே விழுந்தான். உடனடியாக அங்கிருந்தவர்கள் ஏணியைக் கொண்டு சிறுவனை மீட்டனர். உள்ளே அதிகப்படியான கழிவுநீர் இல்லாததால் சிறுவன் உயிர் தப்பியதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இடது காலில் காயம் ஏற்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சிறுவனுக்கு மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட முதலுதவி சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளான். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நிகழ்ந்தது தெரியவந்துள்ளது. சம்பவத்தின் காட்சிகள் அருகில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்தன. தற்போது அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.