உலகையே அச்சறுத்திவரும் கரோனாவிற்கு இங்கிலாந்து, அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா என சில நாடுகளே தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளன. பிற நாடுகள் தடுப்பூசியை முழுவதுமாகவே வெளிநாட்டிலிருந்து வாங்கி பயன்டுத்திவருகின்றன. இந்தநிலையில், பாகிஸ்தான் கரோனாவிற்கு தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளது.
பாகிஸ்தான் தடுப்பூசியை உருவாக்க சீனா, மூலப்பொருட்களை வழங்கி உதவியுள்ளது. சீனா உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசிக்குக்குப் 'பாக்வாக்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பாக்வாக் தடுப்பூசி நேற்று (01.06.2021) அறிமுகம் செய்யப்பட்டது. விரைவில் இந்த தடுப்பூசியின் உற்பத்தி தொடங்கும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்த தடுப்பூசியின் அறிமுக நிகழ்வில் பேசிய பாகிஸ்தான் பிரதமரின் சுகாதாரத்திற்கான சிறப்பு உதவியாளர், "சீனா ஏற்கனவே எங்கள் நண்பன். கரோனா தாக்கியபோது எங்களுக்கு உதவ முன்வந்தது" என தெரிவித்தார். நிகழ்வில் பேசிய பாகிஸ்தானுக்கான சீன தூதர், "தடுப்பூசி தயாரிப்பு இரு நாடுகளுக்கிடையே இருக்கும் நட்பிற்கு உதாரணம்" என தெரிவித்தார்.