Published on 08/05/2019 | Edited on 08/05/2019
பாகிஸ்தானின் லாகூர் நகரத்தில் உள்ள சூபி புனித தலம் அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ரமலான் நோண்பு துவங்கியுள்ள இந்த காலகட்டத்தில் வழிபாட்டு தலத்தின் அருகே நடந்த இந்த வெடிகுண்டு தாக்குதல் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காவல்துறை வாகனத்தை குறிவைத்து இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. ஏற்கனவே கடந்த 2010 ஆம் ஆண்டு இதே வழிபாட்டு தலத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.