வாரத்திற்கு ஆறு நாள் பிரதமராகவும், ஒருநாள் இலவச சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணராகவும் பணியாற்றி உலகம் முழுவதும் பாராட்டுகளை பெற்று வருகிறார் பூடான் நாட்டின் பிரதமர் லோதே ஷெரிங்.
பூடானில் நடந்து வந்த மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்த பின் மூன்றாவது பிரதமராக பதவியேற்றவர் லோதே ஷெரிங், வாரநாட்களில் நாட்டின் பிரதமராகவும், வார இறுதி நாளான சனிக்கிழமைகளில் சிறுநீரக அறுவைசிகிச்சை நிபுணராக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தும் வருகிறார்.
பூடானின் முதல் சிறுநீரக அறுவைசிகிச்சை நிபுணரான இவர் தனது அரசியல் பிரவேசத்திற்காக பூட்டான் தேசிய மருத்துவமனையில் இருந்து ராஜினாமா செய்தார். இருந்தாலும் பிரதமர் ஆன பிறகும் தன் மருத்துவ பணியில் இருந்து விலகாத அவர் மறுத்து சேவையும் ஆற்றி வருகிறார். அதுமட்டுமல்லாமல் வாரத்திற்கு ஒரு நாள் மருத்துவ மாணவர்களுக்கு இரண்டு மணி நேரம் சிறப்பு பயிற்சியும் கொடுக்கிறார். அரசியலில் இருந்தாலும் மருத்துவாராகவும் மக்கள் சேவை ஆற்றும் இவருக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.