
மாநில அரசின் அனுமதி இல்லாமலேயே இனி சிபிஎஸ்இ பள்ளிகளை தொடங்கலாம் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தெரிவித்துள்ளது.
சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க மாநில அரசின் தடையின்மை சான்று தேவை என்ற நடைமுறை முன்பு இருந்தது. இந்த நிலையில், சிபிஎஸ்இ பள்ளிகள் அனுமதிக்கான விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க மாநில அரசின் தடையில்லா சான்று பெறாமல் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், விண்ணப்பிக்கும் பள்ளிக்கு அங்கீகாரம் கொடுக்க ஆட்சேபம் உள்ளதா? என மாநில கல்வித்துறையிடம் மத்திய அரசு கருத்து கேட்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. 30 நாட்களுக்குள் மாநில அரசு ஆட்சேபனை தெரிவிக்காபடில், ஆட்சேபனை இல்லை என கருதப்பட்டு பள்ளிக்கு அனுமதி வழங்கப்படும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தெரிவித்துள்ளது. பள்ளிகளுக்கு தடையில்லா சான்று வழங்கும், மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு பறித்துள்ளதாக கருதப்படுகிறது.