
தனியாக நின்ற பெண்ணிடம் நட்பாக பழகி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், பெங்களூரு நகரைச் சேர்ந்தவர் 30 வயது பெண். இந்த பெண்ணுக்கு திருமணமாகிவிட்டது. இந்த நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று, தனது நண்பரை பார்ப்பதற்கு கோரமங்களாவின் ஜோதி நிவாஸ் கல்லூரி சந்திப்பில் இந்த பெண் நின்று கொண்டிருந்தார். அப்போது 20 வயது மதிக்கத்தக்க நான்கு ஆண்கள், இந்த பெண்ணிடம் உரையாடத் தொடங்கியுள்ளனர். இவர்கள் நட்பாக பழகிய பின்னர், பாதிக்கப்பட்ட பெண்ணை இரவு உணவிற்காக ஹோட்டல் அறைக்கு அழைத்துள்ளனர்.
அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்ததால், உடனடியாக அவரை கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்பு, அந்த பெண்ணை ஹோட்டலில் இறக்கிவிட்டு சென்றனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் தனது வீட்டிற்கு சென்று தனக்கு நேர்ந்த கொடுமைகளை தனது கணவரிடம் தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக இச்சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், இச்சம்பவத்தில் ஈடுபட்ட, அஜித், விஸ்வாஷ், ஷிவ்ய் ஆகிய 3 பேரை கைது செய்தனர். நான்காவது நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர்களிடம் போலீசர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.