Skip to main content

பிரபஞ்ச அழகிப்  போட்டி; விதிகளில் மாற்றம்

Published on 22/08/2022 | Edited on 22/08/2022

 

miss universe

 

70 ஆண்டுகளாக நடத்தப்படும் பிரபஞ்ச அழகிப் போட்டிக்கான விதிகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

 

1952ம் ஆண்டு முதல் நடத்தப்படும் பிரபஞ்ச அழகிப் போட்டிகள் கடந்த 2021ம் ஆண்டு வரை 70 பிரபஞ்ச  அழகிகளை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளது. எத்தனை புகழை இப்போட்டி வென்றவர்களுக்கு கொடுக்குமோ, அத்தனை  கட்டளைகளும் கட்டுப்பாடுகளும் போட்டியாளர்களுக்கு விதிக்கும். இப்போட்டியில் வென்றவர்களுக்கு ரூபாய் 1.8 கோடி பரிசுத்தொகையாகவும், அந்த ஆண்டு முழுதும் மாத ஊதியமாக சிறு தொகையும் கொடுக்கப்படும். ,மேலும், அந்த ஆண்டு முழுவதும் போட்டியில் வென்றவர்கள் அமெரிக்காவில் உள்ள  நியூயார்க் நகரில் அமைந்திருக்கும் பிரபஞ்ச அழகி மாளிகையில் ஒரு வருடம் தங்க அனுமதிக்கப்படுவார்.

 

இத்தனை சிறப்புகள் கொண்ட இந்த போட்டியின் விதிமுறைகள் தற்போது தளர்த்தப்பட்டிருக்கிறது. பிரபஞ்ச அழகி போட்டிகளில் பங்கேற்பவர்கள் கட்டாயம் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. அதோடு அல்லாமல் வெற்றி பெற்றவர்கள் தன் பதவிக்காலம் முடியும் வரை திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்ற விதிமுறையும் இருந்தது. ஆனால் தற்போது திருணம் ஆன பெண்கள் பிரபஞ்ச அழகி போட்டிகளில் பங்குகொள்ளலாம் என விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளது. மேலும் குறைந்த வயது தாய்மார்களும் பங்குகொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மாற்றம் உலக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 70 ஆண்டுகளில் நடந்த பிரபஞ்ச அழகி போட்டிகளில் மொத்தம் மூன்று முறை மட்டுமே இந்தியா வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  


 

சார்ந்த செய்திகள்

Next Story

முடிவுக்கு வந்த போர் நிறுத்தம்; மீண்டும் தொடங்கிய தாக்குதல்

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

The ceasefire ended; The attack resumed

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்தும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

 

இந்த நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த நவ. 29 ஆம் தேதி தொடங்கிய தற்காலிக போர் நிறுத்தம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், தற்போது மீண்டும் போர் துவங்கியுள்ளது. போர் விமானங்கள் மூலம் காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக் குழுவின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கத்தார், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், தற்போது மீண்டும் காசா மீது தாக்குதலை தொடங்கியுள்ளது இஸ்ரேல்.

 

 

 

Next Story

தொடரும் தாக்குதல்; 3 லட்சம் காசா மக்கள் அகதிகளாக வெளியேற்றம்

Published on 12/10/2023 | Edited on 12/10/2023

 

Continued attack; 3 million Gazans evacuated as refugees

 

இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இரு நாடுகளுக்கு நடுவில் காசா இருப்பதால் அங்கு வாழும் மக்கள் எப்போதும் உயிர் பயத்துடனேயே இருந்து வருகின்றனர். இந்த நிலையில்தான் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7 ஆம் தேதி காலை, 20 நிமிடத்தில் 5 ஆயிரம் ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கிச் செலுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 

தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் காசாவை சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஹமாஸ் படையினர் உயிரிழப்பதை விட அப்பாவி பாலஸ்தீன மக்கள் அதிகளவில் உயிரிழப்பதாகக் கூறப்படுகிறது. அப்பாவி பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதால் மனித உரிமை அமைப்புகள் சர்வதேச நாடுகளும் தலையிட்டு போரை நிறுத்த வேண்டும். காசா நகரில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பாலஸ்தீன அரசு கேட்டுக்கொண்டுள்ளது.  குறிப்பாக ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் இருக்கும் கட்டிடங்கள் மீது தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது. இதனால் மேலும் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

 

இந்நிலையில் ஐநா வெளியிட்டுள்ள தகவலில், இதுவரை இஸ்ரேல் போர் தொடர்ந்து வரும் நிலையில் காசாவில் இருந்து சுமார் 3.38 லட்சம் பேர் அகதிகளாக வெளியேற்றப்பட்டுள்ளனர். காசாவில் 22 லட்சம் மக்கள் வாழ்ந்துவரும் நிலையில் 11 சதவிகித மக்கள் அகதிகளாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போதும் தீவிர தாக்குதல் தொடர்ந்து வருவதால் காசாவில் மீதம் உள்ள மக்களுக்கு உணவு, குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்' என வலியுறுத்தியுள்ளது.