mohammed bin salman

Advertisment

வளைகுடா நாடுகளுள் ஒன்றான சவுதியில் தற்போது மன்னராட்சி முறை நடந்து வருகிறது. அந்தநாட்டின்மன்னராக 86 வயதானசல்மான் பின் அப்துல்அஜிஸ் அல் சவுத் இருந்து வருகிறார். இந்தநிலையில்அந்தநாட்டின்பட்டத்து இளவரசரானமுகமது பின் சல்மான் அந்தநாட்டின் முடிசூடா மன்னராக மாறியுள்ளார்.

அண்மைக்காலமாக சவுதி மன்னர் சல்மான், பெரிய அளவில் பொதுவெளியில் தோன்றவில்லை. அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தச்சூழலில், முகமது பின் சல்மானே வெளிநாட்டு தலைவர்களை வரவேற்பதுடன், பிராந்திய மாநாடுகளையும் நடத்தி வருகிறார்.

அதேபோல் முக்கிய கூட்டங்களையும் தலைமை தாங்கி நடத்தி வருகிறார்பட்டத்து இளவரசர் வெளிநாட்டு அதிபர்களைசந்திப்பது,மாநாடுகளுக்குத் தலைமை தாங்குவது என்பது, இதற்கு முன்னர் மன்னர் உடல்நலமில்லாத போதுதான்நடைபெற்றதாகசர்வதேச அமைதிக்கான கார்னகி அறக்கட்டளையின் யாஸ்மின் ஃபாரூக்கூறியுள்ளார்.

Advertisment

மொத்தத்தில் முகமது பின் சல்மான் மன்னராக முடிசூட்டப்படும்முன்னரே, மன்னரின் பணிகளை கவனித்து வருகிறார்.