அஜர்பைஜான் நாட்டின் பாக்கு என்ற இடத்தில் இருந்து ட்ரோஸ்னி என்ற 100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதன்படி இந்த விமானம் கஜகஸ்தான் நாட்டின் அக்டாவ் என்ற இடத்தில் பறந்துகொண்டிருந்தது. அப்போது இந்த விமானத்தை அவசரமாகத் தரையிறக்க முயற்சி செய்துள்ளனர். இருப்பினும் கீழே விழுந்து நொறுங்கிய விமானம் தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்து சம்பவத்தைத் தொடர்ந்து உடனடியாக மீட்புக் குழுவினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், மீட்புக் குழுவினர் தீயை அணைத்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விமான விபத்தில் சிக்கி 42 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் தொடர்ந்து, மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த விபத்தில் சிலர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதே சமயம் இந்த விமானத்தில் பயணம் செய்த மற்றவர்களின் நிலை குறித்து அறிய மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முன்னதாக, இந்த விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்னதாக அப்பகுதியில் உள்ள விமான நிலையம் அருகே பலமுறை வட்டமடித்ததாகக் கூறப்படுகிறது. பயணிகள் விமானம் நடுவானில் வெடித்துச் சிதறிய சம்பவம் உலகம் முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.