அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கிறது பெர்ரியெஸ்ஸா ஏரி. இந்த ஏரியில் ஒரு மர்மச்சுழல் இருக்கிறது. அந்தச் சுழலின் பின்னணி என்ன?
சென்னையில் நமது செம்பரம்பாக்கம் ஏரியை மொத்தமாக திறந்துவிட்டு நூற்றுக்கணக்கானவர்கள் பலியானது இன்னமும் நினைவில் இருக்கிறது அல்லவா?
அதுபோல ஒரு விபத்து எப்போதுமே ஏற்படாமல் தடுக்க இந்தச் சுழல் உதவுகிறதாம். அமெரிக்காவின் முக்கியமான நான்கு நீர்ப்பாசன ஏரிகள் அடிக்கடி நிரம்பி வெள்ள அபாயத்தை ஏற்படுத்துகின்றன. அவற்றில் பெர்ரியெஸ்ஸா ஏரி முக்கியமானது.
இந்த ஏரி திடீர் மழை காரணமாக ஆபத்தைச் சந்திக்கும் என்ற நிலையில், ஏரியின் கொள்ளளவு அபாயகட்டத்தை தொடும் நிலை ஏற்பட்டால், அணையின் மதகு வழியாக மட்டுமின்றி, கூடுதலாக ஒரு வெளியேற்றும் வழியும் உருவாக்கப்பட்டது.
அதுதான் இந்தச் சுழல். அணையின் நீர்மட்டம் குறிப்பிட்ட அளவுக்கு மேல் உயரும்போது, அதிகபட்ச நீர் இந்த வழியில் வெளியேறும். அப்புத அது மிகப்பெரிய சுழல் போல இருக்கும்.
மற்ற நாட்களில் அது ஒரு தொட்டிபோல காட்சியளிக்கும். அபூர்வமாக இந்தச் சுழல் உருவாகும். அப்போது அதைக் கண்டுரசிக்க ஏராளமானோர் கூடுவது வாடிக்கை.