Skip to main content

மலையாள எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் காலமானார்! 

Published on 25/12/2024 | Edited on 25/12/2024
 Malayalam writer Mt Vasudevan Nair passed away

கேரளாவின் மலையாள திரையுலகில் பிரபல கதாசிரியர், இயக்குநர் எனப் போற்றப்பட்டவர் எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர். இவருக்கு வயது 91. இந்நிலையில் இவருக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவால் மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும் பலனின்றி அவர் உயிரிழந்தார். இவரது மறைவுக்குக் கேரள முதல்வர் பிரனாயி விஜயன், திரை பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மலையாள இலக்கியத்தின் பிதாமகன் என  எம்.டி.வாசுதேவன் நாயர்  அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் கட்சியின் தலைவருமான கமலஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு மாபெரும் எழுத்துக்கலைஞனை இழந்திருக்கிறோம். மலையாள இலக்கிய உலகின் மிகப்பெரும் ஆளுமை எம்.டி.வாசுதேவன் நாயர் நம்மைவிட்டுப் பிரிந்திருக்கிறார். மலையாளத் திரை உலகுக்கு நான் அறிமுகமான ‘கன்யாகுமரி’ படத்தின் படைப்பாளராக அவருடன் நான் கொண்ட சிநேகத்துக்கு இப்போது ஐம்பது வயது. கடைசியாக, சமீபத்தில் வெளியான ‘மனோரதங்கள்’ வரை அந்த நட்பு தொடர்ந்தது.

மகத்தான நாவல்களை மலையாள இலக்கிய உலகுக்குக் கொடையாகக் கொடுத்ததோடு, வெற்றிகரமான திரைக்கதாசிரியராகவும் திகழ்ந்தவர். பத்திரிகைத் துறையிலும் தன் தடத்தை ஆழமாகப் பதித்த அவரது மறைவு திகைப்பையும் வேதனையையும் ஒருங்கே ஏற்படுத்துகிறது. எழுத்தின் எல்லா வடிவங்களிலும் தனக்கான தனித்துவத்தோடு பங்களித்த, ஆளுமை மிக்க ஒரு மனம் ஓய்வு பெற்றிருக்கிறது. இது பேரிழப்பு. தென்னிந்திய இலக்கிய வாசகர்களையும் கலா ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தக்கூடியது. மாபெரும் எழுத்துக் கலைஞனுக்கு என் இருதயப்பூர்வமான அஞ்சலி” எனத் தனது இரங்கல்களைத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்