Published on 09/06/2019 | Edited on 09/06/2019
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற 353 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 352 ரன்களை எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 117 ரன்களும், விராட் கோலி 82 ரன்களும், ரோகித் சர்மா 57 ரன்களும்,பாண்ட்யா 40 ரன்களும் எடுத்தனர்.