Published on 23/02/2019 | Edited on 23/02/2019
திமுக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு வரும் 25 ஆம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் வழங்கப்படும் என திமுக அறிவித்துள்ளது.
மேலும் போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மார்ச் ஒன்று முதல் ஏழாம் தேதி மாலை 6 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல் 21 தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிட விரும்புபவர்களும் விருப்ப மனு பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.