ரஷ்ய நாட்டை சேர்ந்தவர் பிரபல நடிகை கமிலா பெலியாட்ஸ்காயா(24). இளம் நடிகையான இவர் தனது ஆண் நண்பருடன் தாய்லாந்திற்கு இன்பச் சுற்றுலாச் சென்றுள்ளார். கழ்பெற்ற சுற்றுலாத்தலமான கோ ஸமுய் கடற்கரைக்குச் சென்ற கமிலா பெலியாட்ஸ்காயா பாறையில் அமர்ந்து தனது கண்களை மூடி யோகா செய்துள்ளார். அதனை வீடியோவாகவும் எடுத்துள்ளார்.
இந்த நிலையில் திடீரென வந்த ராட்சத அலை ஒன்று யோக செய்துகொண்டிருந்த நடிகை கமிலா பெலியாட்ஸ்காயாவை இழுத்துச் சென்றது. இதனைத் தொடர்ந்து அலறித் துடித்த அக்கம்பக்கத்தினர் நடிகையை மீட்க முயற்சி செய்துள்ளனர். ஆனால், எந்த முயற்சியில் பலனளிக்காததால் சிறுது நேரம் கழித்து, நடிகை கமிலா பெலியாட்ஸ்காயா கடலில் தத்தளித்து நீரில் முழ்கி உயிரிழந்தார்.
இதையடுத்து நடிகை கமிலா பெலியாட்ஸ்காயா இழுத்துச் செல்லப்பட்ட இடத்தில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகை கமிலா பெலியாட்ஸ்காயாவை கலை அலை இழுத்துச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.