Skip to main content

கத்தியைக் காட்டி வழிப்பறி; இளைஞரை மடக்கிப் பிடித்த போலீசார்

Published on 22/05/2023 | Edited on 22/05/2023

 

villupuram thirukovilur kadaganur village youngster incident

 

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள  காடகனூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீராம் (வயது 21). இவர் நேற்று முன்தினம் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் திருக்கோவிலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உறவினரை பார்த்து விட்டு மீண்டும் ஊருக்கு செல்வதாக காடகனூர் பேருந்து நிறுத்தம் அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென இரண்டு மர்ம நபர்கள் ஸ்ரீராமை வழிமறித்தனர். அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி ஸ்ரீராம் வைத்திருந்த பணத்தை பிடுங்கிக் கொண்டனர். இதனை தொடர்ந்து ஸ்ரீராம் கூச்சல் போடவே அவ்வழியாக சென்ற பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு ஓடி வந்துள்ளனர்.  அதை கண்ட மர்ம நபர்கள் தங்கள் வந்த இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடிவிட்டனர்.

 

இது குறித்து அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் ஸ்ரீராம் அளித்த புகாரின் மீது காவல் நிலைய ஆய்வாளர் சித்ரா,  உதவி ஆய்வாளர் அன்பழகன் மற்றும் போலீசார் ஸ்ரீராமை வழிமறித்து கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் பில்ராம்பட்டு அருகே காவல் உதவி ஆய்வாளர் அன்பழகன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை மடக்கிப் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தியதில் அவர் வடகரைத்தாழனூர் என்ற  கிராமத்தைச் சேர்ந்த முகிலன் (வயது 21) என்பதும் இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காடகனூர் பகுதியில் தனது நண்பர் விநாயகமூர்த்தி என்பவருடன் சேர்ந்து ஸ்ரீராமை வழிமறித்து கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

 

வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட அவரது இருசக்கர வாகனம் மற்றும் கத்தியை காட்டி மிரட்டி பறிக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். முகிலனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  தலைமறைவாக உள்ள விநாயக மூர்த்தியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்