Published on 22/12/2020 | Edited on 22/12/2020

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களும் வரும் ஜனவரி 18- ஆம் தேதி முதல் முழுமையாக இயங்கும் என்று உயர்நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் (பொறுப்பு) பூர்ணிமா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தலைமைப் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் முழுமையான நேரடி விசாரணை நடக்கும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையில் நடந்த நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவு பற்றி நாளைக்குள் மாவட்ட முதன்மை நீதிபதிகள் கருத்துக் கூறலாம். வழக்கறிஞர்களுக்கு ஆன்லைன் விசாரணை தேவைப்பட்டால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.