வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மது குடிப்போர் வழிப்புணர்வு சங்கத்தின் மாநில தலைவர் செல்லப்பாண்டியனும் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். இதற்காக வேலூர் மாநகருக்கு வருகை தந்துள்ள செல்லப்பாண்டியன், டாஸ்மாக் கடைகள் உள்ள பகுதிகளுக்கு சென்று அங்கு குடிமகன்கள் வீசி விட்டு சென்ற காலி பாட்டில்களை சேகரித்து அதனை விற்பனை செய்து அதன் மூலமாக வரும் தொகையை கொண்டு ஜூலை 18 ஆம் தேதி வேட்பு மனுதாக்கல் செய்யவுள்ளதாக கூறியுள்ளார். அதோடு, காலி பாட்டில்களை சேகரிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.
தேர்தல் வாக்குறுதி என சிலவற்றை கூறியுள்ளார்.அதில், பார்களில் அதிக விலைக்கு சரக்கு விற்பதையும், போலி சரக்கு விற்பதையும் தடுப்பேன், பாலியல் வன்கொடுமைகளை தடுத்திட மது விற்கப்படும் இந்திய மாநிலங்களில் சிவப்பு விளக்கு பகுதி என்கிற ஒன்றை உருவாக்க குரல் கொடுப்பேன், மதுபானங்களை கடல் நீரில் மட்டும் தான் தயாரிக்க வேண்டும், மதுபோதை மறுவாழ்வு மையங்களை உருவாக்க குரல் கொடுப்பேன் என நான்கு வாக்குறுதிகளை தந்துள்ளார். அரசியலிலும், ஆட்சியிலும், சமூகத்திலும் பல கோமாளிகளை கண்டு வரும் நாம், தேர்தல் அரசியலில் இது போன்ற காமெடியர்களை வேலூர் தொகுதி மக்கள் இன்னும் எத்தனை பேரை பார்க்கப் போகிறார்களோ.