Skip to main content

''நாளை மறுநாள் முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி''-தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சு தகவல்!!

Published on 18/05/2021 | Edited on 18/05/2021

 

'' Vaccination for those over 18 years of age from Day after tomorrow '' - Tamil Nadu Health Minister Ma.Su information !!

 

நாடு முழுவதும்  கரோனா இரண்டாவது அலை பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகத்திலும் தினம்தோறும் பாதிக்கப்படுவோர்  எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக, தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கரோனா நோயாளிகள் வெளியே சுற்றினால்  அபராதம் விதிக்கப்படும் எனச் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

விட்டு தனிமையில் இருக்கும் கரோனா நோயாளிகள் வெளியே சுற்றித் திரிந்தால் 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும், இரண்டாவது முறையையும் வெளியே சுற்றினால் கரோனா முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
 

 

'' Vaccination for those over 18 years of age from Day after tomorrow '' - Tamil Nadu Health Minister Ma.Su information !!

 

இந்நிலையில், நாளை மறுநாள் முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''18 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை மறுநாள் முதல் கரோனா தடுப்பூசி போடப்படும். தடுப்பூசி போடும் திட்டத்தை நாளை மறுநாள் முதல்வர் தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் 5 கோடி பேருக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டால் கரோனா முழுமையாக அழிக்கப்படும்.

 

தனியார் மருத்துவமனையில் போலி ரெம்டெசிவிர் மருந்து செலுத்தப்பட்டதால் மருத்துவர் உயிரிழந்துள்ளார். போலி  ரெம்டெசிவிர் மருந்து விற்ற சுரேஷ் என்பவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவரின் பரிந்துரையின்றி  ஆக்சிஜன் எடுத்துக்கொள்வது தவறு. மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்குக்கே சென்று கரோனா தடுப்பூசி போடப்படும். கிராமப்பகுதிகளில் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் தேவையான வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும்'' எனத் தெரிவித்தார்.
 

 

 

 

சார்ந்த செய்திகள்