Published on 30/09/2022 | Edited on 30/09/2022

சென்னை கே.கே.நகரில் அரசுப் பேருந்து மோதியதில் பள்ளி மாணவர் உயிரிழந்தார்.
கே.கே.நகரை சேர்ந்த ஜானகிராமன் என்பவரது மகன் கல்யாண் பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியே சென்ற மாநகர பேருந்து மோதியதில் மாணவர் பேருந்தின் சக்கரத்தில் சிக்கியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்