Published on 04/11/2019 | Edited on 04/11/2019
தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலையை அவமதித்த மர்மநபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றன. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றன. மேலும் பிள்ளையார்பட்டியை சேர்ந்த கிராம மக்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டன.

அதன் தொடர்ச்சியாக தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது, திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசுவது- தஞ்சை, பிள்ளையார்பட்டியில் அவரது சிலையை அவமானப்படுத்துவது என, தமிழுக்காகப் பாடுபட்டவர்களை அவமதிப்பது தொடர்கதையாகிவிட்டது. இதற்காக, காவல்துறையை கையில் வைத்திருக்கும் அதிமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும்! என்று குறிப்பிட்டுள்ளார்.