திருச்சி துறையூரைச் சேர்ந்த குமார்(34) என்பவர் திருப்பூர் மாவட்டம் வேலம்பட்டி பகுதியில் உள்ள ஒரு டீ கடையில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் குமார் 13 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட சிறுமியின் பெற்றோர் அவினாசிபாளையம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார், குமார் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து போக்சோ வழக்கின் கீழ் குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் நடைபெற்ற விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த மகேஷ்குமார் மற்றும் சூலூர் பகுதியைச் சேர்ந்த சிரஞ்சீவி ஆகிய இருவரும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்பத்தி சிறையில் அடைத்தனர்.