ராமநாதபுரத்தில் 38 வயது மதிக்கதக்க பெண் ஒருவர், உறவினரை பார்க்கச் சென்றுவிட்டு ஆட்டோவில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். புத்தேந்தல் ரயில்வே கேட் அருகே ஆட்டோ வந்தபோது, அங்கே மது அருந்திக்கொண்டிருந்த நான்கு இளைஞர்கள் ஆட்டோவில் இருந்த ஓட்டுநர் மட்டும் அந்த பெண்னை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து 4 பேரும் சேர்ந்து ஆட்டோ ஓட்டுநரை அடித்து துரத்திவிட்டு, அந்த பெண்ணை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு தூக்கிச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பெண் நேற்று முன்தினம்(31.12.2024) இரவு பலத்த காயங்களுடன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிக்கிச்சைக்காக சேர்ந்துள்ளார்.
உடனடியாக மருத்துவமனையில் இருந்து காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுட்டது. அதன்பேரில் மருத்துவமனை வந்த போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினர். பெண் கொடுத்த புகாரின் பேரில் புத்தேந்தல் பகுதியைச் சேர்ந்த புவனேஷ்குமார்(27), சரண்முருகன்(29), செல்வகுமார்(27), முனீஸ் கண்ணன்(25) ஆகிய 4 பேரை மீது கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.