அதிமுக ஆட்சியில் இருந்த காலத்தில் ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 30 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுக பிரமுகர் விஜய நல்லதம்பி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 2021ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே ராஜேந்திர பாலாஜி முன்னாள் அமைச்சர் என்ற அரசியல் பின்புலத்தைப் பயன்படுத்துவதால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதில் தாமதப்படுத்துகிறார்கள். எனவே இந்த வழக்கில் நியாயம் கிடைக்கவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார்தாரர் ரவீந்திரன் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றம், “இந்த வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்க என்ற நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததால் இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்படுகிறது. தமிழக காவல் துறைக்கு நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த நேரமில்லை” என உயர்நீதிமன்றம் தனது அதிருப்தியைத் தெரிவித்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.