Published on 23/09/2019 | Edited on 23/09/2019
தூத்துக்குடியில் கனிமொழியின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற ஆளுநர் தமிழிசை முடிவு. தெலங்கானா ஆளுநராக பதவியேற்றதால் வழக்கை தொடர்ந்து நடத்த விரும்பவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தெலங்கானா ஆளுநர் தரப்பு தகவல்.

இந்நிலையில் வழக்கை தொடர்ந்து நடத்துவதா? வேண்டாமா? என்பது குறித்து அக்டோபர் 14- ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்று நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.