Skip to main content

கலெக்டரை மறை முகமாக வீடியோ எடுத்த அதிகாரி!

Published on 28/01/2020 | Edited on 28/01/2020

தேனி மாவட்டத்தில் உள்ள வருசநாடு அருகே வனப்பகுதியில் வாரத்தில் 3 நாட்கள் விளைபொருட்களை சரக்கு வாகனத்தில்  எடுத்து செல்ல  விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் அனுமதி கொடுத்ததை வனத்துறை அதிகாரி மறைமுகமாக  வீடியோ எடுத்தார்.

 

Theni District Collector meeting -officer secretly took video

 

 

தேனி மாவட்டதில் உள்ள  கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார். மேகமலை வன உயிரின காப்பாளர் போஸ்லின் சச்சின் துக்காரம், மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், போடி, கம்பம், ஆண்டிபட்டி ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அப்போது  ஆண்டிபட்டி தொகுதியில் உள்ள வருசநாடு அருகே இருக்கும் பொம்முராஜபுரம். இந்திராகாலனி கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் சிலர் பேசும் போது, "எங்கள் கிராமங்களில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பல்வேறு காய்கறி, பழங்கள் சாகுபடி செய்து வருகின்றனர். பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வரும் விவசாயிகள் விளை பொருட்களை தேனி, சின்னமனூர், ஆண்டிப்பட்டி பகுதிகளுக்கு எடுத்துச் செல்கின்றனர். ஆனால் தற்போது வனத்துறையினர் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே சரக்கு வாகனம் வந்து செல்வதற்கு அனுமதிக்கின்றனர். தினமும் விளை பொருட்களை கொண்டு செல்வதற்கு சரக்கு வாகனம் வந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்கள்.

 



அதற்க்கு வன உயிரின காப்பாளர் பதில் அளிக்கையில், "இந்த கிராமங்களுக்கு நடந்து செல்வதற்கு மட்டுமே ஒரு மீட்டர் அகல பாதை வழங்கப்பட்டு உள்ளது. வன உயிரினங்கள் நலன் கருதியும், விவசாயிகள் நலன் கருதியும் தான் வனப்பகுதி வழியாக வாரத்தில் ஒரு நாள் மட்டும் சரக்கு வாகனம் செல்வதற்கு அனுமதிக்கப்படுகிறது"  என்றார். அப்படி  இருந்தும் கூட தொடர்ந்து விவசாயிகள் இதே கோரிக்கையை முன்வைத்து பேசினார்கள். வாரத்தில் ஒரு நாள் மட்டும் என்ற நிலை உள்ளதால் விளைபொருட்கள் வீணாகி வருவதாக கூறினர்கள்.

உடனே  வனத்துறை அதிகாரிகளுடன் கலெக்டர் பல்லவி பல்தேவ்  ஆலோசனை நடத்தினார். அப்போது  கூட்டத்தில் எதிரேமுன் வரிசையில் உட்கார்ந்து இருந்த உதவி வனகாப்பாளர் மகேந்திரனோ தனது செல் போன் மூலம்  வனத்துறை அதிகாரிகளிடம் கலெக்டர் பேசுவதை மறைமுக வீடியோ எடுத்து கொண்டு இருந்தார். அதை கண்டு அருகே இருந்த மற்ற துறை அதிகாரிகளும் கூட எதற்க்கு சார் இப்படி மறைமுகமாக வீடியோ எடுக்கிறீர்கள் என்று கேட்டதற்கு உங்க வேலையை பாருங்கள் என்று முகம் சுளித்து பேசி இருக்கிறார்.

 



அதன் பின் மற்ற துறை அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் தான் வனத்துறை அதிகாரிகளிடம் கலெக்டர் சுமுகமாக பேசி உடன் பாடு ஏற்பட்டதின் பேரில் வாரத்தில் மூன்று  நாட்கள் சரக்கு வாகனம் இயக்க அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவித்தார். அதோடு எந்த நாட்களில் இயக்க வேண்டும் என்பதை விவசாயிகளே முடிவு செய்து கொள்ள கலெக்டர் அனுமதி அளித்தார். அதை கண்டு  விவசாயிகளும்  மகிழ்ச்சி அடைந்ததுடன் மட்டும்மல்லாமல் கலெக்டருக்கு நன்றி தெரிவித்து விட்டு ஒவ்வொரு வாரமும்  திங்கள், புதன்.மற்றும்  வெள்ளிக்கிழமை ஆகிய மூன்று  நாட்களில் சரக்கு வாகனம் இயக்கிக் கொள்வதாக தெரிவித்தனர். அதற்கு கலெக்டரும் அனுமதி கொடுத்தார்.

இதையெல்லாம் தொடர்ந்து அந்த உதவி வனக்காப்பாளர் மகேந்திரன்  மறைமுகமாக வீடியோ எடுத்தார். அதை கண்டு மற்ற அதிகாரிகளே மனம் நொந்து போய் விட்டனர். ஆனால் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகளுக்காக வனத்துறை உயர் அதிகாரிகளிடம் பேசி அங்கு விளையக்கூடிய பொருட்களை கொண்டு வருவதற்கு மூன்று நாட்கள் அனுமதி வாங்கி கொடுத்திருக்கிறார். அதற்கு விவசாயிகள் மத்தியில் கலெக்டரை ஒருபுறம் பாராட்டி வருகிறார்கள். அப்படி இருக்கும்போது வனத்துறையை சேர்ந்த ஒரு அதிகாரியே கலெக்டர்  பேச்சை மறைமுகமாக எதற்க்காக  வீடியோ எடுத்தார் என்று அதிகாரிகள் மத்தியிலையே  பெரும் பரபரப்பாக பேசப்பட்டும் வருகிறது

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு குறித்து நீலகிரி ஆட்சியர் விளக்கம்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Nilgiris Collector Explains Strong Room CCTV Cameras Malfunction

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் தான் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (27.04.2024) மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கின. 

Nilgiris Collector Explains Strong Room CCTV Cameras Malfunction

இந்நிலையில் வாக்கு இயந்திரம் வைக்கப்பட்ட அறையில் சிசிடிவி செயலிழந்தது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியரும், நீலகிரி மக்களவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலருமான அருணா செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது, “ வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாத காரணத்தினால் நேற்று (27.04.2024) மாலை 6.17 முதல் 6.43 வரை 20 நிமிடங்களுக்கு 173 கண்காணிப்பு கேமராக்களும் செயல் இழந்துவிட்டன. அந்தக் குறிப்பிட்ட 20 நிமிடங்களுக்கு எந்தவித கண்காணிப்பு கேமரா பதிவுகளும் இல்லை.

அதாவது அதிக வெப்பத்தால் ஷார்ட் சர்கியூட் ஏற்பட்டு சிசிடிவி கேமராவில் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் எந்தவித முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளன. அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. மேலும் இது குறித்து சந்தேகம் இருந்தால் கட்சியினரை அழைத்துச் சென்று காட்ட தயாராக இருக்கிறோம். மத்திய பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 3 கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு குறைபாடுக்கு 200 சதவீதம் வாய்ப்பு இல்லை. எதிர்காலத்தில் இதுபோல் எந்தப் பிரச்சனைகளும் ஏற்படாமல் இருக்க தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தகது. 

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.