கள்ளச்சாராயம் காய்ச்சிய இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி தொகுதியில் இருக்கும் கடமலைக்குண்டு காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட சிறப்பாறை என்ற கிராமத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதாக வந்த தகவலின்படி, கடமலைக்குண்டு போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது சிறப்பாறை கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் இளைஞர்கள் சிலர் சாராயம் காய்ச்சும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த ஊரல் பானைகளை போலீசார் கைப்பற்றி, கள்ளச்சாராயம் காய்ச்சியதாக சிறப்பாறை கிராமத்தை சேர்ந்த மொக்கப்பாண்டி, ராம்குமார், மனோஜ், பாண்டி, பாலமுருகன், ஜெயசீலன் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரோனா எதிரொலி மூலம் தமிழகத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதின் பேரில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருக்கும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் குடிமகன்கள் சரக்கு கிடைக்காமல் நகரம் முதல் பட்டிதொட்டிகள் வரை சரக்குகாக அலைந்து வருகிறார்கள். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கும்பல் தான் கள்ளச்சாராயம் காச்சி குடிமகன்களுக்கு சப்பளை செய்ய இருந்தனர். இந்த விஷயம் போலீசாரின் காதுக்கு எட்டியதின் பெயரில் தான் அந்த கும்பலை மடக்கிப்பிடித்து இருக்கிறது.