Skip to main content

'தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு'- வானிலை ஆய்வு மையம் தகவல்!

Published on 15/07/2020 | Edited on 15/07/2020

 

TAMILNADU RAINS CHENNAI METEOROLOGICAL DEPARTMENT

 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

 

கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, திண்டுக்கல், தேனி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நாமக்கல் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக கீழ் அணைக்கட்டில் 7 செ.மீ., துவாக்குடி, மஞ்சளாறு பகுதிகளில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்